தஞ்சாவூரில், பெண் காவலர் தூக்கிட்டு தற்கொலை

X

தற்கொலை
தஞ்சாவூரில் ஆயுதப்படை காவல் பெண் காவலர் ஞாயிற்றுக்கிழமை தூக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார். திருவாரூர் மாவட்டம் சேந்தமங்கலத்தைச் சேர்ந்த பழனிவேல் மகள் காவேரி செல்வி (24). கடந்த 2023 ஆம் ஆண்டில் காவல் துறையில் சேர்ந்த இவர் தஞ்சாவூர் ஆயுதப்படை காவலில் காவலராக பணியாற்றி வந்தார். இதனால் இவர் மணிமண்டபம் அருகே உள்ள ஆயுதப்படை காவலர்கள் குடியிருப்பு வளாகத்தில் வசித்து வந்தார். இந்நிலையில் ஞாயிற்றுக்கிழமை காலை காவேரி செல்வி வீட்டில் தூக்கிட்ட நிலையில் உயிரிழந்திருந்தார். தகவல் அறிந்த காவல் துறையினர் நிகழ்விடத்துக்குச் சென்று சடலத்தைக் கைப்பற்றி, உடற்கூறாய்வுக்காக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இவர் காதல் பிரச்னை காரணமாக தற்கொலை செய்து கொண்டார் என முதல் கட்ட விசாரணையில் தெரிய வந்தது. இது குறித்து தெற்கு காவல் நிலையத்தினர் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Next Story