ஆம்பூர் அருகே லாரி மோதி இருவர் உயிரிழப்பு

X
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அருகே துக்க நிகழ்ச்சி செல்ல சாலையில் நடந்து மற்றும் இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த நபர்கள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் உயிரிழப்பு. 2 பேர் படுகாயம், ஆம்பூர் நகர காவல்துறையினர் விசாரணை.. திருப்பத்தூர் மாவட்டம்ஆம்பூர் அடுத்த புதுகோவிந்தாபுரம் பகுதியை சேர்ந்த இளைஞர் ஒருவர் உயிரிழந்த நிலையில், அவரது துக்க நிகழ்ச்சியிற்கு இளைஞரின் உறவினர்கள், மற்றும் அதே பகுதியை சேர்ந்த நபர்கள் வந்த நிலையில், அப்பொழுது தேநீர் அருந்துவதற்காக சிலர் அப்பகுதியில் உள்ள பெங்களூர் - சென்னை தேசிய நெடுஞ்சாலையில் நடந்தும், இருசக்கர வாகனத்தில் சென்றுக்கொண்டிருந்த போது, அதே சாலையில் கோயமுத்தூரில் இருந்து சென்னை நோக்கி சென்ற சரக்கு வாகனம் திடீரென ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோரம் சென்றுக்கொண்டிருந்த இருசக்கர வாகனத்தின் மீது மோதி நடந்து சென்றவர்கள் மீது மோதியுள்ளது, இதில் இருசக்கர வாகனத்தில் சென்ற பழனி சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்த நிலையில், டெல்லி பாபு,நடந்து சென்ற வெங்கடேசன் மற்றும் சரக்கு வாகன ஓட்டுநர் முனியப்பன் ஆகியோர் படுகாயமடைந்த நிலையில்,அவர்களை அங்கிருந்த பொதுமக்கள் மீட்டு சிகிச்சையிற்காக ஆம்பூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டுச்சென்றனர், அங்கு சிகிச்சை பலனின்றி டெல்லி பாபு உயிரிழந்துள்ளார் மேலும் 2 பேருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வரும் நிலையில், இச்சம்பவம் குறித்து ஆம்பூர் நகர காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்க்கொண்டு வருகின்றனர்.. மேலும் துக்க நிகழ்ச்சியிற்கு வந்து தேநீர் அருந்துவதற்காக சாலையோரம் சென்ற நபர்கள் மீது சரக்கு வாகனம் மோதிய விபத்தில் 2 பேர் படுகாயமடைந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது..
Next Story

