சிவப்பு நிறத்தில் தேங்கிய தண்ணீர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கள ஆய்வு

சிவப்பு நிறத்தில் தேங்கிய தண்ணீர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கள ஆய்வு
X
சிவப்பு நிறத்தில் தேங்கிய தண்ணீர் மாசுக்கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் கள ஆய்வு மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை அதிகாரிகள் நீர் நிலைகளில் கள ஆய்வு செய்தனர்.
திருப்பூர் அருகே உள்ள கரைப்புதூர் சுற்று வட்டார பகுதி களில் ஏராளமான சாய ஆலைகள் இயங்கி வருகின்றன. இவற்றில் இருந்து வெளியேறும் சாயக்கழிவு நீரை சுத்திக ரிக்க சுத்திகரிப்பு மையங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இருப்பினும் முறை கேடாக இயங்கும் சில சாய ஆலை களில் இருந்து வெளியேற்றப்படும் சாயக்கழிவு நீர் ஓடை, குளம், குட்டை உள்ளிட்டவற்றில் கலக்கின்றன. இதனால் நிலத்தடி நீர் மாசடைந்து வருவதுடன், விவசாயம், கால் நடை வளர்ப்பு தொழில் உள்ளிட்டவைகள் பாதிக்கப்படு கிறது. நிலத்தடி நீர் உப்புத்தன்மை அதிகரித்து பொதுமக்கள் அவற்றை பயன்படுத்த முடியாத நிலை ஏற்படுகிறது. இதன் காரணமாக முறை கேடாக சாயக்கழிவு நீரை வெளியேற்றப்படுவதை தடுக்கும் நோக்கில் மாசுக்கட்டுப் பாட்டு வாரிய பறக்கும் படை அதிகாரிகள் திடீர் கள ஆய்வு பணியை மேற்கொண்டு வருகின்றனர். இது குறித்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை கோட்ட பொறியாளர் லாவண்யா கூறியதாவது:- கடந்த சில நாட்களாக மழை பெய்து வருவதால் இதனை சாதக மாக பயன்படுத்தி சில சாய ஆலைகள் முறைகேடாக சாயக்கழிவு நீரை வெளியேற்ற வாய்ப்புகள் உள்ளது. இதனை காண்காணிக்கவே கள ஆய்வுகளை மேற் கொண்டு வருகிறோம். கரைப்புதூர், சின்னக்கரை, குங்குமபாளையம், அருள்புரம், உள்ளிட்ட சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள நீர் நிலைகளில் நீர் மாதிரி சேகரிக்கப்பட்டு ஆய்வுக்கு உட்படுத்தப்படும். சாதாரணமாக டி.டி.எஸ். அளவு 2 ஆயிரத்து நூறுக்குள் இருக்க வேண்டும். இதைவிட அதிகமாக இருந்தால் ஆய்வு மேற்கொள்ளப்படும். டி.டி.எஸ்.அளவு 10 ஆயிரத்திற்குக்குள் இருப்பதை கள ஆய்வின் போதே உறுதி செய்து விடுவோம். டி.டி. எஸ். அளவு 10 ஆயிரத்திற்கு மேல் இருந்தால் மாதிரி நீரை ஆய்வகத்திற்கு கொண்டு செல்வோம். இவ்வாறு அவர் கூறினார். தொடர்ந்து மாசுக்கட்டுப்பாட்டு வாரிய பறக்கும் படை அதிகாரிகள் பச்சாங்காட்டுபாளையத்தில் உள்ள குட்டையில் மாதிரி சேகரித்து போது குட்டை அருகே மற்றொரு பகுதியில் தேங்கியிருந்த நீர் அடர் சிவப்பு நிறத்தில் இருந்தது. அதன் மாதிரியையும் சேகரித்த அதிகாரிகள் சீமை கருவேல மரம் நீரில் ஊறினாலும் இது போன்று தண்ணீரின் நிறம் மாறும். இருப்பினும் இது குறித்தும் ஆய்வு செய்யப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.
Next Story