திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் அறிவிப்பு

திருவள்ளூர் மாவட்டத்தில் அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் : ஆட்சியர் அறிவிப்பு
X
அங்கன்வாடி பணியாளர்கள் நேரடி நியமனம் ஏப்ரல் 23ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்கவும்
திருவள்ளூர் மாவட்டத்தில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி பணிகளின் கீழ் மாவட்டத்தில் செயல்படும் குழந்தைகள் மையங்களில் காலியாக உள்ள 301 அங்கன்வாடி பணியாளர் மற்றும் 68 அங்கன்வாடி உதவியாளர் பணியிடங்கள் நேரடியாக பணி நியமனம் செய்யப்பட உள்ளது இப்ப பணிகளுக்கு என 23- 4 -2025 ஆம் தேதிக்குள் விண்ணப்பிக்க வேண்டும். அங்கன்வாடி பணியாளருக்கு தொகுப்பூதியம் மாதம் ஒன்றுக்கு ₹7700. 12 மாத காலத்திற்குப் பின் சிறப்பு காலமுறை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ₹7500 முதல் ₹ 24,200 வரை வழங்கப்படும் 12ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் அங்கன்வாடி உதவியாளருக்கு தொகுப்பூதியம் ₹4,100. 12 மாதங்களுக்கு பின் சிறப்பு காலமுறை ஊதியம் மாதம் ஒன்றுக்கு ₹4,500 முதல் ₹12,500 வரை வழங்கப்படும் பத்தாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும் என மாவட்ட ஆட்சியர் பிரதாப் அறிவித்துள்ளார்
Next Story