கிராம உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்

கிராம உதவியாளர் சங்கத்தினர் காத்திருப்பு போராட்டம்
X
தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்
காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் தாலுகா அலுவலகத்தில், தமிழ்நாடு வருவாய்த் துறை கிராம உதவியாளர் சங்கம் சார்பில், மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, நேற்று, மாலை 6:00 மணியளவில் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர். வட்ட தலைவர் கமலக்கண்ணன் தலைமை தாங்கினார். அதில், கருணை அடிப்படையில் உடனடியாக வேலை வழங்க வேண்டும். காலமுறை ஊதியம் 15,700 ரூபாய் வழங்க வேண்டும். ஓய்வு பெற்ற மற்றும் உயிரிழந்த ஊழியர்களிடம் பிடித்தம் செய்த பணப்பலன்களை உடனடியாக வழங்க வலியுறுத்தப்பட்டது. மாநில செயலர் மகேந்திரபூபதி, மாவட்ட செயலர் சேகர் மற்றும் பலர் பங்கேற்றனர்.
Next Story