வடமாநில பெண் தொழிலாளி தூக்கிட்டு தற்கொலை

X
குமரி மாவட்டம் திக்கணங்கோடு அருகே கிழக்கு தாராவிளை பகுதியை சேர்ந்தவர் செல்வின். இவருக்கு ஆடு மாடுகளை வளர்த்து வரும் பண்ணை உள்ளது. இந்த பண்ணையில் ஜார்க்கண்ட் மாநிலம் நாகரிகையை சேர்ந்த கரலால் அவரது மனைவி ஜெயக்குமாரி ( 22) ஆகியோர் குடும்பத்தோடு அங்கேயே தங்கி வேலை பார்த்து வருகின்றனர். கர லாலுக்கு குடிப்பழக்கம் கிடையாது. ஆனால் நேற்று முன்தினம் அவர் குடித்துவிட்டு வீட்டிற்கு வந்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த ஜெயக்குமாரி, இது என்ன புதுப்பழக்கம்? என கேட்டு தகராறு செய்துள்ளார். இதில் இருவர்களுடைய கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில் மன வேதனை அடைந்த ஜெயக்குமாரி பண்ணைக்கு உள்ளே சென்று அங்கு தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் சம்பவ இடத்திற்கு சென்று ஜெயக்குமாரின் உடலை மீட்டு பிரத பரிசோதனைக்காக தக்கலை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து பண்ணை உரிமையாளர் செல்வின் அளித்த புகாரின் பேரில் தக்கலை போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story

