காங்கிரஸ் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்

காங்கிரஸ் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம்
X
களியக்காவிளை
முஸ்லிம்களுக்கு எதிராக வக்பு வாரிய சட்டத்தை நிறைவேற்றியது, மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை வாய்ப்பு திட்ட ஊதியம் வழங்க மறுப்பது, பி எம் ஸ்ரீ பள்ளிகளுக்கு ஒதுக்கப்பட்ட ரூ. 4 ஆயிரம்  கோடி தமிழகத்து ஒதுக்காத நிலையில் பிரதமர் மோடியின் தமிழக வருகைக்கு எதிர்ப்பு தெரிவித்து குமரி மேற்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் கருப்புக்கொடி ஆர்ப்பாட்டம் நேற்று களியக்காவிளையில்  நடைபெற்றது.         மேற்கு மாவட்ட தலைவர் டாக்டர் பி னுலால்  சிங் தலைமை வகித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவை காங்கிரஸ் கட்சி தலைவர் ராஜேஷ் குமார் எம்எல்ஏ ஆர்ப்பாட்டத்தை துவக்கி வைத்து பேசினார். தாரகை கத்பட் எம் எல் ஏ போராட்டத்தை விளக்கி பேசினார்.       இந்த ஆர்ப்பாட்டத்தில் காங்கிரசார் ஏராளம் பேர் கலந்து கொண்டு கட்சிக்கொடியுடன் கருப்பு கொடியும் ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story