அதிமுக உறுப்பினர் சேர்க்கையை அதிகப்படுத்த வேண்டும்

X
நாகை மாவட்டம் திருமருகல் ஒன்றியம் ஏனங்குடி ஊராட்சி கயத்தூர் தனியார் மண்டபத்தில், திருப்புகலூர், ஏனங்குடி, புத்தகரம், ஆதலையூர் ஊராட்சிகளுக்கான, அதிமுக பூத் கமிட்டி பொறுப்பாளர்கள் ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு, கழக அமைப்பு செயலாளர் ஆசைமணி தலைமை வகித்தார். ஒன்றிய செயலாளர்கள் ராதாகிருஷ்ணன், பக்கிரிசாமி, நாகை நகர செயலாளர் தங்க.கதிரவன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கழக செய்தி தொடர்பாளரும், நாகை மாவட்ட பூத் கமிட்டி பொறுப்பாளருமான பாபு முருகவேல், பொதுக்குழு உறுப்பினர் செங்குட்டுவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். கூட்டத்தில், அதிமுக உறுப்பினர்கள் சேர்க்கையை அதிகப்படுத்துவது, வர இருக்கின்ற சட்டமன்றத் தேர்தலில் ஒன்றிணைந்து செயல்படுவது, அதிமுக வாக்குபதிவை அதிகப்படுத்துவது என்பது உட்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது. கூட்டத்தில், ஜெயலலிதா பேரவை ஒன்றிய செயலாளர் ராஜேஷ்குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், பூத் கமிட்டி உறுப்பினர்கள் பலர் கலந்து கொண்டனர். முடிவில், தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட பொருளாளர் நடராஜன் நன்றி கூறினார்.
Next Story

