மனைவியை தாக்கிய கணவன் மீது வழக்கு

X
சுசீந்திரம் அருகே உள்ள நல்லூர் பகுதியைச் சார்ந்தவர் லெட்சுமி (35). இவருக்கும் அதே பகுதியைச் சார்ந்த சந்திரகுமார் (41) என்பவருக்கும் திருமணம் ஆகி 8 வயதில் ஒரு ஆண் குழந்தையும், 7 வயதில் ஒரு பெண் குழந்தையும் உள்ளனர். கணவன் மனைவிக்கு இடையே கருத்து வேறுபாடு காரணமாக தற்பேறு பிரிந்து வாழ்ந்து வருகின்றார்கள். நேற்று நல்லூரில் உள்ள வீட்டின் அருகே லெட்சுமி நிற்கும்போது சந்திரகுமார் மற்றும் விஜய் பிரவீன் என்பவருமாக அவரை செல்போனில் படம் பிடித்துள்ளார். ஏன் என்னை செல்போனில் படம் பிடிக்கிறீர்கள் எனக் கேட்டுள்ளார். இதனால் கோபமடைந்த சந்திரகுமார் லெட்சுமியை தாக்கி உள்ளார். இதனை தடுத்த லெட்சுமியின் தங்கை அனிதா என்பவரையும் தாக்கி, கழுத்தில் கிடந்த 10 பவுன் தங்கச் செயினை பறித்து சென்றுள்ளார். சத்தம் போடவே சந்திரகுமாரோடு வந்திருந்த விஜய் பிரவீன் ஆகியோரும் லெட்சுமியை தகாத வார்த்தைகளால் பேசி கொலை மிரட்டல் விடுத்து சென்றுள்ளனர். இது குறித்து லெட்சுமி சுசிந்திரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். சுசீந்திரம் காவல்துறையினர் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
Next Story

