அஞ்சுகிராமத்தில் காங்கிரஸ் ஆர்ப்பாட்டம்

X
முஸ்லீம் மக்களுக்கு எதிராக வக்பு வாரிய சட்டத்தை இயற்றிய பா.ஜ.க அரசையும், தமிழகத்திற்கு தர வேண்டிய நிதியை தராமல் ராமேஸ்வரம் வருகை தந்த மோடியை கண்டித்தும் குமரி கிழக்கு மாவட்ட காங்கிரஸ் சார்பில் அகஸ்தீஸ்வரம் தெற்கு வட்டாரம் அஞ்சுகிராமத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. குமரி கிழக்கு மாவட்ட தலைவர் வக்கீல் கே.டி.உதயம் தலைமை தாங்கினார். வட்டார தலைவர்கள் சாம் சுரேஷ்குமார், தங்கம் நடேசன், மாவட்ட செயல் தலைவர்கள் சகாயராஜ், மகாலிங்கம் ஆகியோர் முன்னிலை வகித்தனர். சிறப்பு விருந்தினராக பிரின்ஸ் எம்.எல்.ஏ, விஜய் வசந்த் எம்.பி கலந்துகொண்டு ஆர்ப்பாட்டத்தை தொடங்கி வைத்தனர். நிகழ்ச்சியில் வட்டார தலைவர்கள் தனித், டேனியல், முருகானந்தம், அசோக் ராக், செல்வராஜ், சாலோமன், ஜெய்சிங், பால் துரை, முருகேசன், மற்றும் யூசுப்கான் ஸ்ரீனிவாசன், அரோக்கியராஜன், டாக்டர் சிவக்குமார், அந்தோணிமுத்து, நடேசன், ஹெலன், அன்ட்ரூஸ் மணி, கலந்துகொண்டனர்.
Next Story

