பா.ஜனதா கொடியேற்று விழா

பா.ஜனதா கொடியேற்று விழா
X
தாராபுரத்தில் பா.ஜனதா கொடியேற்று விழா
தாராபுரத்தில் திருப்பூர் தெற்கு மாவட்ட பா.ஜனதா கட்சியின் சார்பில் ஸ்தாபனம் நாளை முன்னிட்டு கண்ணன் நகர் பகுதியில் உள்ள திருப்பூர் தெற்கு மாவட்ட கட்சி அலுவலகத்தில் தாராபுரம் நகரத் தலைவர் ரங்கநாயகி தலைமையில் திருப்பூர் மாவட்ட தலைவர் மோகனப்பிரியா சரவணன் முன்னிலையில் கொடியேற்று விழா நடைபெற்றது. விழாவில் முன்னாள் எம்.பி., மாநில செய்தி தொடர்பாளர் கார்வேந்தன் கலந்துகொண்டு பேசினார். மூத்த உறுப்பினர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் உருவ படங்களுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். ஓ.பி. சி.அணி மாநில செயற்குழு உறுப்பினர் கொங்கு ரமேஷ், கூட்டுறவு பிரிவு செயலாளர் சுகுமார் மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story