அரசு பள்ளியில் ஆண்டுவிழா - நடிகர் பங்கேற்பு

X
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் அருகே சோழம்பட்டியில் உள்ள அரசு துவக்கப் பள்ளியில் 48வது ஆண்டு விழா நடைபெற்றது. வட்டார கல்வி அலுவலர் குமார் தலைமையில் நடைபெற்ற இந்த ஆண்டுவிழாவிற்கு, திரைப்பட நடிகரும், இயக்குனருமான சமுத்திரகனி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். முன்னதாக தலைமை ஆசிரியர் சகாயராஜ் அனைவரையும் வரவேற்றார். விழா மேடையில் மாணவர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றது. காது கேட்காத, வாய் பேசாத மாற்றுத்திறனாளி மாணவி ஆடிய வரவேற்பு நடனத்தை சமுத்திரக்கனி எழுந்து நின்று பாரட்டி, புகைப்படம் எடுத்துக் கொண்டார். தொடர்ந்து நிகழ்ச்சியில் கலந்து கொண்ட சமுத்திரக்கனி பேசுகையில், என்றுமே ரியல் ஹீரோக்கள் ஆசிரியர்கள்தான், நாங்கள் அதை பிரதிபலிப்பு செய்பவர்கள் என்றார். மாணவர்கள் 4 வகை உள்ளனர். ஆசிரியர்கள் அதை கண்டுபிடிக்க வேண்டும், பெற்றோர்களுக்கு அவை தெரிந்திருக்க வேண்டும் என்றார். குழந்தைகளிடம் தவறு உள்ளது என்றால் அது பெற்றோர்களிடம் அல்லது ஆசிரியர்களிடம் இருக்கிறது என்று அர்த்தம். ஒன்றாம் வகுப்பு முதல் ஐந்தாம் வகுப்பு வரைக்குள் மாணவர்களுக்கு எல்லோரும் ஒன்று தான். எல்லோருக்கும் எல்லாம் வேண்டும் என பேசினார்
Next Story

