திருவாரூரில் மிகப் பிரசித்தி பெற்ற ஆழித்தேரோட்டம்.

X
ஆசியாவிலேயே மிகப்பெரிய தேரான திருவாரூர் தியாகராஜர் கோயில் ஆழித்தேரோட்டம் காலை 9 மணிக்கு தொடங்கியது. லட்சக்கணக்கான பக்தர்கள் பங்கேற்று ஆரூரா...! தியாகேசா...! என்ற கோஷத்தோடு தேரை வடம் பிடித்து இழுத்து வருகின்றனர். சைவத் தலங்களில் முதன்மை தலமாக விளங்கும் திருவாரூர் தியாகராஜர் கோயிலில் பங்குனி உத்திர திருவிழா கடந்த மாதம் 15ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதனைத் தொடர்ந்து தினந்தோறும் சுவாமி வீதி உலா காட்சிகள் நடைபெற்றது. முக்கிய நிகழ்வான தேரோட்டம் இன்றைய தினம் நடைபெற்று வருகிறது. இதனை ஒட்டி தியாகராஜர் நேற்று இரவு அஜபா நடனத்துடன் கோயிலில் இருந்து புறப்பட்டு தேரில் எழுந்தருளினார். அதனைத் தொடர்ந்து இன்று காலை 9 மணிக்கு தேர் வடம் பிடிக்கப்பட்டது. லட்சக்கணக்கான பக்தர்கள் ஆரூரா தியாகேசா என்ற பக்தி கோஷங்களுடன் வடம் பிடித்து தேரை இழுத்தனர்.
Next Story

