மக்கள் தொடர்பு முகாம் தேதி அறிவிப்பு

X
சிவகங்கை மாவட்டம், திருப்பத்தூர் வட்டம், நெற்குப்பை உள்வட்டம், மகிபாலன்பட்டி கிராமத்திலுள்ள "திருவருள் இல்லம்" திருமண மண்டபத்தில், வருகின்ற 09.04.2025 (புதன் கிழமை) அன்று காலை 10.00 மணியளவில் மக்கள் தொடர்பு முகாம் நடைபெறவுள்ளது. இம்முகாமில், அரசின் திட்டங்களை துறை சார்ந்த முதன்மை அலுவலர்களைக் கொண்டு பொதுமக்களுக்கு திட்டங்கள் குறித்து எடுத்துரைத்து, தகுதிவாய்ந்த பயனாளிகளை பயன்பெறச் செய்வதே இம்மக்கள் தொடர்பு முகாமின் நோக்கமாகும். எனவே, மேற்கண்ட கிராமத்தை சேர்ந்த பொதுமக்கள் அனைவரும் நடைபெறவுள்ள மக்கள் தொடர்பு முகாமில் கலந்து கொண்டு, அரசின் திட்டங்களை பெறுவதற்கான வழிமுறைகளை அறிந்து கொண்டு பயன்பெறலாம் என மாவட்ட ஆட்சியர் ஆஷா அஜித் தெரிவித்துள்ளார்.
Next Story

