ராமநாதபுரம் பாலிடெக்னிக் கல்லூரி ஆண்டு விழா நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கீழக்கரை முகம்மது சதக் பாலிடெக்னிக் கல்லூரியில் 45 ஆவது ஆண்டு விழா மற்றும் பணி நியமன ஆணைகள் வழங்கும் விழா பாலிடெக்னிக் கல்லூரி முதல்வர் சேக்தாவூது தலைமையில் நடைபெற்றது. முகம்மது சதக் அறக்கட்டளையின் தலைவர் முகமது யூசுப், செயலாளர் ஹாஜியாணி ஷர்மிளா, செயல் இயக்குநர் ஹமீது இப்ராஹிம், இயக்குநர் ஹபீப் முஹம்மது ஆகியோர் முன்னிலை வகித்தனர். உடற்கல்வி இயக்குநர் தமருதாசலமூர்த்தி ஆண்டறிக்கை வாசித்தார். கல்லூரியின் துணை முதல்வர் கணேஷ்குமார் வரவேற்றார். இவ்விழாவில் மனிதவள துறைத்தலைவர் உதயகுமார், சென்னை லூகாஸ் டிவிஎஸ் லிமிடெட் சிஎஸ்ஆர் ஆலோசகர் கண்ணன் ஆகியோர் சிறப்பு விருந்தினர்களாக கலந்து கொண்டனர். மின்னியல் துறை தலைவர் பாலசுப்ரமணியன் நன்றி கூறினார்.
Next Story

