மகளிர் திட்ட அலுவலகத்திற்கு வருடாந்திர ஒப்பந்த அடிப்படையில் வாகனம் ஒப்பந்தம் எடுப்பதில் முறைகேடு நடந்திருப்பதாக பாதிக்கப்பட்ட நபர் தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார்

புகார்
தேனி மாவட்ட மகளிர் திட்ட அலுவலகத்திற்கு ஒப்பந்த அடிப்படையில் 7 இருக்கைகள் மற்றும் 5 இருக்கைகள் கொண்ட வாகனம் தேவை என ஒப்பந்தப்புள்ளி வெளியிடப்பட்டிருந்தது இதில் சுமார் 10 வாகன ஒப்பந்ததாரர்கள் விலைப்பட்டியல், வாகன ஆவணங்களை சமர்ப்பித்து ஒப்பந்தத்தில் பங்கேற்றனர் கடந்த 28ஆம் தேதி மகளிர் திட்ட அலுவலகத்தில் ஒப்பந்தம் கோரப்பட்ட ஒப்பந்ததாரர்களின் விலைப்பட்டியல் கொண்ட ஆவணங்கள் பிரிக்கப்பட்டது அப்போது 7 இருக்கைகள் கொண்ட நான்கு சக்கர வாகனத்திற்கு குறைந்தபட்சமாக 43 ஆயிரத்து 900 ரூபாய் கோரப்பட்ட வி.ஆர்.பி டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் கொடுக்காமல் 45 ஆயிரம் ரூபாய் ஒப்பந்தம் கேட்ட போனக்ஸ் டிராவல்ஸ் நிறுவனத்திற்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளதாக பாதிக்கப்பட்ட வி.ஆர்.பி டிராவல்ஸ் உரிமையாளர் பிரசாந்த் புகார் வாகன ஒப்பந்தத்திற்கு குறைந்தபட்ச விலை கேட்ட தனக்கு ஒப்பந்தம் வழங்கப்படாமல் அதிகபட்சமாக விலை கேட்ட நபருக்கு ஒப்பந்தம் வழங்கப்பட்டு முறைகேடு நடந்திருப்பதாக குற்றச்சாட்டு தெரிவித்தார் இதுகுறித்து தனக்கு எந்தவித விளக்கமும் காரணமும் கூறவில்லை என குற்றச்சாட்டும் தெரிவிக்கும் பிரசாந்த் முறையாக ஆவணங்கள் இல்லா வாகனத்திற்கு ஒப்பந்த போடப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார் இது குறித்து தேனி மாவட்ட ஆட்சியரிடம் புகார் தெரிவித்த அவர் இதற்கு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார்
Next Story