ராமநாதபுரம் பள்ளி சார்பாக பாராட்டு விழா நடைபெற்றது

X
ராமநாதபுரம் மாவட்டம் கடலாடி வட்டம் சின்ன ஏர்வாடி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மானாமதுரை அக்வா அக்ரி ப்ராசஸிங் பிரைவேட் லிமிடெட் சி.எஸ்.ஆர் நிதி மூலம் ரூ.2 லட்சம் மதிப்பில் பள்ளி மாணவர்களுக்கு தேவையான குளிர் சாதன பெட்டி, தொலைக்காட்சி பெட்டி, வட்ட மேஜைகள், நாற்காலிகள், மேஜை பெஞ்சுகள், மின்விசிறிகள், பெடஸ்டல் பேன்கள், சீருடைகள் வழங்கியது. ஆசிரியர் தங்கமணி அனைவரையும் வரவேற்றார். தலைமை ஆசிரியை சாந்தி, மானாமதுரை அக்வாஅக்ரி ப்ராசசிங் பிரைவேட் லிமிடெட் மேலாளர்கள் செந்தில் ராஜன், கிஷோர் குமார் ஆகியோர் சிறப்புரையாற்றினர். பள்ளி மேலாண்மை குழு உறுப்பினர் இளையராஜா நன்றி கூறினர்.
Next Story

