பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை

பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை
X
மதுரை மேலூர் அருகே பூச்சி மருந்து சாப்பிட்டு இளம் பெண் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் நடந்துள்ளது.
மதுரை மாவட்டம் மேலூர் அருகே மேலவளவு சோமகிரி பட்டி வசிக்கும் பெரியவரின் மகள் சிந்தாமணி( 17) என்பவர் பிளஸ்டூ படித்து விட்டு வீட்டில் இருந்துள்ளார். இவருக்கு மாதந்தோறும் வயிறு வலி வருவது உண்டு. இதன் காரணமாக விரக்தியில் வீட்டிலிருந்து பூச்சி மருந்தை சாப்பிட்டு மயங்கி கிடந்துள்ளார். இதை கண்ட குடும்பத்தினர் அவரை மீட்டு மேலூர் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக கூறினர். இது குறித்து மேலவளவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story