கரூர் மாவட்ட அஇஅதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கினார்.
கரூர் மாவட்ட அஇஅதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் திறந்து வைத்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கினார். கோடை காலத்தில் பொது மக்களின் தாகம் தீர்த்திடும் வகையில், ஆண்டுதோறும் கரூர் மாவட்டத்தில் அதிமுக சார்பில் நீர் மோர் பந்தல் அமைத்து பொதுமக்களின் தாகம் தீர்த்து வருகின்றனர் . இதன் தொடர்ச்சியாக நடப்பாண்டில் கரூர் மினி பேருந்து நிலையம் அருகே, கரூர் மாவட்ட அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் சார்பில், கரூர் மாவட்ட செயலாளரும்,முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் தலைமையில் தர்பூசணி பழங்கள், வெள்ளரி, இளநீர், நீர்மோர் பந்தலை திறந்து பொதுமக்களுக்கு வழங்கினார். கோடையின் தாக்கத்திலிருந்து தற்காத்துக் கொள்ள பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் இளநீர் ,தர்பூசணி, நீர்,மோர் உள்ளிட்டவைகளை பெற்றுக் கொண்டு முன்னாள் அமைச்சருக்கு நன்றி தெரிவித்தனர். தொடர்ந்து ஆட்டோ ஓட்டுநர்களுக்கு சீருடை வழங்கி வாழ்த்து தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் அதிமுக நிர்வாகிகள் தொண்டர்கள் என ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
Next Story





