விவசாயத்திற்கு தங்கு தடை இன்றி நீர் கிடைக்க தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல்.
விவசாயத்திற்கு தங்கு தடை இன்றி நீர் கிடைக்க தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார் மாவட்ட ஆட்சியர் தங்கவேல். கரூர் மாவட்டம், மண்மங்கலம் தாலுகாவில், புகலூர் பள்ள வாய்க்கால் தூர் வாரும் பணியை மாவட்ட ஆட்சியர் தங்கவேல் இன்று கொடியசைத்து துவக்கி வைத்தார். ஆண்டுதோறும் ஜூன் மாதம் 12ஆம் தேதி மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் பாசனத்திற்காக திறக்கப்படும். அதற்கு முன்பாக அனைத்து பாசன வாய்க்கால்களும் நீர்வள ஆதாரத்துறை மூலம் சிறப்பு தூர் வாரும் திட்டத்தின் கீழ் தூர் வாரும் பணிகள் தமிழகத்தில் துவங்கி உள்ளது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்டத்தில் இன்று மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தூர்வாரும் பணியை துவக்கி வைத்தார். இதன் மூலம் விவசாயிகளுக்கு தங்கு தடை இன்றி கடைமடை வரை தண்ணீர் செல்வதற்கு ஏதுவாக இந்த பணிகள் நடத்தப்படுவதாகவும் இதற்காக கரூர் மாவட்டத்தில் மட்டும் 5.86 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மாவட்ட ஆட்சியர் தங்கவேல் தெரிவித்துள்ளார்.
Next Story






