காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில விரைவு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்

காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில விரைவு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம்
X
காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப கோரி தமிழ்நாடு தொடக்கப்பள்ளி ஆசிரியர் மன்றத்தின் மாநில விரைவு செயற்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
அரியலூர். ஏப்.7- அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் தனியார் ஹோட்டலில் தொடங்கியது. மாநிலத் தலைவர் அண்ணாதுரை தலைமை வகித்தார். மாநிலத் துணைத் தலைவர் வேல்மணி வரவேற்றார், பொதுச் செயலாளர் தியோட ராபின்சன் தீர்மானங்களை முன்மொழிந்து விளக்க உரையாற்றினார், . இச்செயற் குழுவில் செங்குந்தபுரம் ஆசிரியை முத்தமிழ் செல்வி பணி நிறைவு பெற்றமைக்கு பாராட்டு, சிறந்த பள்ளிக்கான பாவலர் விருது செங்குந்தபுரம் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளிக்கு வழங்கப்பட்டது. இவ்விருதினை வளர்மதி துணை தலைமை ஆசிரியர் பெற்றுக் கொண்டார். ஆசிரியர்கள் வேல்மணி, கலியராஜ் இருவருக்கும் சிறை மீண்ட செம்மலுக்கான பாவலர் விருது வழங்கப்பட்டது. முத்தமிழ் செல்வி ஆசிரியர் செங்குந்தபுரம், விருது வழங்கப்பட்ட ஆசிரியர்களை பாராட்டி மாநில மகளிர் அணி அமைப்பாளர் வனிதா பொன்னாடை அணிவித்து பரிசு பொருள் வழங்கி பாராட்டினார்கள். இச்செயல் குழுவில் புதிய பென்ஷன் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும் பழைய பென்ஷன் திட்டத்தை மீண்டும் கொண்டு வர வேண்டும். இடைநிலை ஆசிரியர்களுக்கு ஊதிய முரண்பாட்டை கலைந்து சம வேலைக்கு சம ஊதியம் அளிக்க வேண்டும். ஈட்டிய விடுப்பு ஒப்படைப்பு தொகையை இந்த ஆண்டு வழங்க வேண்டும், காலியாக உள்ள ஆசிரியர் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி, தேர்தல் வாக்குறுதியிலே உறுதி அளித்தபடி செயல்படுத்திட வேண்டும் என தமிழக அரசுக்கு தீர்மானங்களை வலியுறுத்தப்பட்டது. இறுதியில் கொள்கை விளக்கச் செயலாளர் சுரேஷ் நன்றி கூறினார்.
Next Story