தென்காசியில் மகா கும்பாபிஷேக விழா. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்

தென்காசியில் மகா கும்பாபிஷேக விழா. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்
X
மகா கும்பாபிஷேக விழா. பல்லாயிரக்கணக்கான பக்தா்கள் தாிசனம்
இந்துகளின் புனித நகரமான வாரணாசி எனப்படும் காசிக்கு இணையான பெருமையையும், சிறப்புகளையும் கொண்டது தென்காசி மாவட்டம் அருள்மிகு காசிவிசுவநாதா் உடனுறை அருள்தரும் ஸ்ரீ உலகம்மன் திருக்கோவில். கிபி 15ம் நூற்றாண்டில் வாழ்ந்த இரண்டாம் பராக்கிரம பாண்டிய மன்னன் கட்டியது. கடந்த 1990-ஆம் ஆண்டு 9 நிலை கொண்ட மிகப்பெரிய ராஜகோபுரம் கட்டப்பட்டு மகா கும்பாபிஷேக விழா நடைபெற்றது. அதன் பின்னர் 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. தற்போது 19 ஆண்டுகளுக்கு பிறகு இன்று மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. இதற்காக கடந்த 3 - ஆம் தேதி கும்பாபிஷேகத்திற்காக விக்னேஸ்வர பூஜை, தேவதா அனுக்கை மகாசங்கல்பத்துடன் கணபதி ஹோமத்துடன் ஆரம்பிக்கப்பட்டது. பின்னர் யாகசாலை பூஜைகள் நடைபெற்றன. இன்று அதிகாலை 6-ஆம் கால யாகசாலை பூஜைகள் நடைபெற்று மகா பூா்ணாகுதிகள் நடைபெற்றன. அதனை தொடா்ந்து கடம் புறப்பாடு நடைபெற்று ராஜகோபுரங்கள் விமான கோபுரங்கள் மூலஸ்தான பிரதான மூா்த்திகளுக்கு மகா கும்பாபிஷேகம் நடைபெற்றது. கும்பாபிஷேக விழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டு சேர்ந்து தரிசனம் செய்தனர். பாதுகாப்பு பணிகளை காவல்துறை பாதுகாப்பு ஏற்பாடுகளை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த் தலைமையில் 4 ஏடிஸ்பிக்கள், 12 டிஎஸ்பிக்கள், 36 காவல் ஆய்வாளர்கள், 138 உதவி காவல் ஆய்வாளர்கள் உட்பட சுமார் 1100 காவலர்கள் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டனர். நான்கு ரத வீதிகளிலும் நகரின் முக்கிய பகுதிகளிலும் போக்குவரத்து காவல்துறையினர், போக்குவரத்தை சீர் செய்யும் பணிகளில் ஈடுபட்டனர். தென்காசி நகரில் ஏற்கனவே 1000க்கும் மேற்பட்ட சிசிடிவி கேமிராக்கள் செயல்பாட்டில் இருக்கும்பட்சத்தில் கூடுதலாக குடமுழுக்கு கண்காணிப்பதற்காக 120 சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன. 4 ரத வீதிகளிலும் தலா ஒரு தீயணைப்பு வாகனம் மற்றும் அவசரகால ஊர்தி நிறுத்தப்பட்டுள்ளது. 10 உயர் கோபுரங்களும் அமைக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. மேலும் பெண்கள், குழந்தைகள் மற்றும் முதியவர்கள் பாதுகாப்பிற்காக சாதாரண உடையிலும் காவலர்கள் ரோந்து பணியில் ஈடுபடுத்த பட்டனர். குடமுழுக்கு நடைபெறும் நேரத்தில் கண்காணிக்க காவல்துறை சார்பில் 5 ட்ரோன்கள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. விழாவில் தென்காசி மாவட்ட ஆட்சியர் கமல் கிஷோர்,மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அரவிந்த், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனி நாடார், ராஜா, தென்காசி பாராளுமன்ற உறுப்பினர் ராணி ஸ்ரீகுமார், தென்காசி தெற்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் ஜெயபாலன், காசி விஸ்வநாதர் ஆலய அறங்காவலர் குழு தலைவர் பாலகிருஷ்ணன் உட்பட கலந்து கொண்டனர்.
Next Story