சிறுசேமிப்பு முகவர்கள் முன்னேற்ற நலச்சங்க கூட்டம்

X

கருப்பூரில் நடந்தது
சேலம் மாவட்ட சிறுசேமிப்பு முகவர்கள் முன்னேற்ற நல சங்க ஆண்டு விழா, பொதுக்குழு கூட்டம் சேலம் 5 ரோடு மருத்துவ சங்க கட்டிட வளாகத்தில் நடந்தது. சங்க தலைவர் கே.எஸ்.கோவிந்தசாமி தலைமை தாங்கினார். மூத்த சிறுசேமிப்பு முகவர்கள் கணேசன், வரதராஜ், பழனிசாமி, பன்னீர்செல்வம், தமிழரசு ஆகியோர் முன்னிலை வகித்தனர். சங்க செயலாளர் வேலுமணி வரவேற்றார். பொருளாளர் முரளி கண்ணன் ஆண்டு அறிக்கை வாசித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக முதுநிலை தபால்காரர் அஜித்குமார், அஞ்சலக மேற்கு கண்காணிப்பாளர் பார்த்திபன், அஞ்சலக முதுநிலை கண்காணிப்பாளர் முனிகிருஷ்ணன், மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் முரளிதரன் ஆகியோர் சிறுசேமிப்பு குறித்து பேசினர். 2023-24- ம் ஆண்டில் மாவட்ட அளவில் 10, 12-ம் வகுப்பு பொதுத்தேர்வில் அதிக மதிப்பெண் பெற்ற முகவர்களின் குழந்தைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து மூத்த முகவர்களுக்கு சிறப்பு பரிசு வழங்கி கவுரவிக்கப்பட்டது. அமைப்பு செயலாளர் லாவண்யா நன்றி கூறினார். நிகழ்ச்சியில் தமிழ்நாட்டின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து முகவர்கள் தங்கள் குடும்பத்துடன் கலந்து கொண்டனர்.
Next Story