சேலம் பள்ளப்பட்டி அருகே கிளப்பில் ஆபாச நடனம்

சேலம் பள்ளப்பட்டி அருகே கிளப்பில் ஆபாச நடனம்
X
மூன்று பேர் கைது போலீசார் நடவடிக்கை
சேலம் பள்ளப்பட்டி அருகே தனியார் மதுபான கிளப் செயல்பட்டு வருகிறது. இந்த கிளப்பில் விதிமுறையை மீறி இரவில் இளம்பெண்களை வைத்து ஆபாச நடனம் நடத்தப்படுவதாகவும் தடை செய்யப்பட்ட கஞ்சா உள்ளிட்ட போதைப்பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகும் பள்ளப்பட்டி போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து தனிப்படை போலீசார் கிளப்பிற்க்கு சென்று அதிரடி சோதனை நடத்தினர். இதில் போதையில் கவர்ச்சி நடனம் ஆடிய இரண்டு அழகிகள், இரண்டு ஆண்கள் சிக்கினர். விசாரணையில் இளம் பெண்கள் சூரமங்கலம், மற்றும் வாழப்பாடி பகுதியை சேர்ந்தவர்கள் என்பது தெரியவந்தது. அவர்களை போலீசார் காப்பகத்திற்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக கிளப்பின் மேலாளர் ரெட்டியூரை சேர்ந்த மணிபாரதி, ஹரிஹரன், ராஜேஸ்வரி ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து அவர்களை கைது செய்தனர். இந்த கிளப்பின் உரிமையாளரை போலீசார் தேடி வருகின்றனர்.
Next Story