பழமாபுரத்தில் தென்னந்தோப்பில் வேலை செய்த பெண் மயங்கி கீழே விழுந்து உயிரிழப்பு.

பழமாபுரத்தில் தென்னந்தோப்பில் வேலை செய்த பெண் மயங்கி கீழே விழுந்து உயிரிழப்பு.
பழமாபுரத்தில் தென்னந்தோப்பில் வேலை செய்த பெண் மயங்கி கீழே விழுந்து உயிரிழப்பு. கரூர் மாவட்டம் புன்னம், முத்துநகர் பகுதியைச் சேர்ந்தவர் மறைந்த பூதல் மனைவி பார்வதி வயது 55. இவர் அருகில் உள்ள பழமாபுரம் பகுதியில் உள்ள சேகர் என்பவருக்கு சொந்தமான தென்னந்தோப்பில் பார்வதி மற்றும் அவரது மகள் சத்யா ஆகியோர் கடந்த ஒன்றரை ஆண்டுகளாக தங்கி வேலை செய்து வந்தனர். இந்நிலையில் ஏப்ரல் 6-ம் தேதி காலை 8 மணி அளவில், வேலை செய்து கொண்டு இருந்த பார்வதி திடீரென மயங்கி கீழே விழுந்தார். உடனடியாக அவரை கரூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள் அவர் ஏற்கனவே உயிரிழந்து விட்டதாக தெரிவித்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த பார்வதியின் மகள் சத்யா அளித்த புகாரில், சம்பவ குலத்திற்கு விரைந்து வந்த காவல்துறையினர், உயிரிழந்த பார்வதியின் உடலை உடற்கூறு ஆய்வுக்காக அதே மருத்துவமனை சவக்கிடங்கிற்கு அனுப்பி வைத்து, இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் வேலாயுதம்பாளையம் காவல்துறையினர்.
Next Story