திருமருகல் வட்டாரத்தில் மேற்கொள்ளப்பட்டு வரும் குடும்ப பதிவேடுகள்

X
நாகை மாவட்ட சுகாதாரத்துறை சார்பில், கிராம வாரியாக சுகாதார விபரங்களை உள்ளடக்கிய குடும்ப உறுப்பினர்கள் விபரம் கணக்கெடுப்பு செய்யப்பட்டு, குடும்ப பதிவேடு சரி செய்யப்படும் பணி நடைபெற்று வருகிறது. அந்த வகையில், நாகை மாவட்டம் திருமருகல் வட்டாரத்தில், வட்டார மருத்துவ அலுவலர் சச்சின் ஆகாஷ் மேற்பார்வையில், கணக்கெடுப்பு செய்யப்பட்ட குடும்ப பதிவேடுகளை சரி பார்க்கும் பணி கிராம சுகாதார செவிலியர்கள், பகுதி சுகாதார செவிலியர்கள் மற்றும் இடைநிலை சுகாதார பணியாளர்கள் ஆகியோரால் தற்போது மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில், திருமருகல் வட்டாரம் ஏனங்குடி ஆரம்ப சுகாதார நிலையத்திற்குட்பட்ட கிராமங்களில் நடைபெற்று வரும் இப்பணிகளை, நாகை மாவட்ட சுகாதார புலனாய்வு உதவி இயக்குனர் விஜயக்குமார் நேற்று நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்து, பணியாளர்களுக்கு உரிய அறிவுரைகளை வழங்கினார்.
Next Story

