நாமக்கல் மாவட்டத்தில் கலைத் திருவிழா

X
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு விவேகானந்தா மகளிர் கல்லூரியில் கல்லூரிகளின் கலைத் திருவிழா இன்று தொடங்கியது இந்த விழாவை விவேகானந்தா கல்லூரியின் தாளாளர் கருணாநிதி தொடங்கி வைத்தார் மூன்று நாள் நடைபெற உள்ள இந்த கலைத் திருவிழாவில் தனி நடனம் குழு நடனம் நாடகம் என தங்கள் திறமைகளை மாணவியர்கள் வெளிப்படுத்தும் வகையில் இந்த கலைத் திருவிழா அமைந்துள்ளதாகவும் போட்டியில் வெற்றி பெறும் முதல் மூன்று இடங்களை பெறும் அணிகளுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளதாகவும் கல்லூரியின் தாளாளர் கருணாநிதி தெரிவித்தார் கல்லூரி மாணவியின் பாம்பு நடனம் கிராம பாரம்பரிய நடனங்களான தேவராட்டம் காவடி ஆட்டம் கரகாட்டம் ஒயிலாட்டம் உள்ளிட்ட பல்வேறு கிராமிய நடனங்களை ஒரே பாடலில் மாணவிகள் ஆடி அசத்தியது பார்வையாளர்கள் மத்தியில் நிகழ்ந்த வரவேற்பை பெற்றது மேலும் காஞ்சனா பாடலுக்கு குழு நடனம் ஆடிய மாணவிகள் தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி பார்வையாளர்களை மிரட்டி இருந்தனர் இந்த கலைத் திருவிழாவில் 150 க்கும் மேற்பட்ட குழு நடனம் மற்றும் தனிநபர் நடனம் நாடகம் என நடத்தப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது
Next Story

