முள்ளிக்குண்டில் ரேஷன் கடை கட்டி தர கோரிக்கை

முள்ளிக்குண்டில் ரேஷன் கடை கட்டி தர வலியுறுத்தி ஆட்சியர் அலுவலகத்தில் மனு
சிவகங்கை மாவட்டம், தேவகோட்டை ஊராட்சி ஒன்றியம் கண்டதேவி ஊராட்சியில் உள்ள முள்ளிக்குண்டு கிராம மக்கள் மாவட்ட ஆட்சியரிடம் மனு அளித்துள்ளனர். அந்த மனுவில் : முள்ளிக்குண்டு கிராமத்தில் சுமார் 150க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. தற்போது உள்ள நியாயவிலைக் கடை தனியாரின் கட்டிடத்தில் இயங்கி வருவதால், வசதியற்ற நிலை தொடர்கிறது. கடந்த காலத்தில் 150 குடும்ப அட்டைகளுக்காக தொடங்கப்பட்ட இந்த கடையில் தற்போது சுற்றுப்புற கிராமங்களையும் உள்ளடக்கியவாறு 350க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பொருட்கள் வாங்கி வருகின்றனர். இதனால், கடையின் தற்போதைய கட்டிடத்தில் போதுமான இடம் இல்லாததால் ரேசன் பொருட்களை சேமித்து வைக்கும் வசதி இல்லை எனக் கூறப்படுகிறது. எனவே, அரசு சார்பாக நிரந்தரமான புதிய நியாயவிலைக் கடை கட்டிடம் அமைக்க வேண்டும் எனக் கிராம மக்கள் வலியுறுத்தி உள்ளனர்.
Next Story