தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் ஆட்சியர் அலுவலக வளாகத்தில் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கம் சார்பில் வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் நியாயமான கோரிக்கை மீது தமிழக அரசு விரைந்து அரசாணைகளை வெளியிட கோரி தமிழக முழுவதும் அனைத்து மாவட்ட தலைநகரங்களிலும் 14,000-பேர் பங்கேற்கும் கோரிக்கை முழக்க ஆர்ப்பாட்டம் நடைபெற்று வருகிறது. இதன் தொடர்ச்சியாக கரூர் மாவட்ட ஆட்சியர் அலுவலக வளாகத்தில் தமிழ்நாடு வருவாய்த்துறை அலுவலர் சங்கத்தின் சார்பில் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மை துறை அலுவலர்களின் பணித்தன்மையினை கருத்தில் கொண்டு அனைவருக்கும் மேம்படுத்தப்பட்ட ஊதியம் வழங்கிட வேண்டும். மூன்றாண்டுகளுக்கும் மேற்பட்ட அலுவலக உதவியாளர் காலி பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும். தமிழக முதல்வரின் தேர்தல் கால வாக்குறுதியான பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்துதல், சரண் விடுப்பு வழங்குதல் ஆகியவற்றை உடனடியாக நிறைவேற்ற வேண்டும் என்பது உள்ளிட்ட 10 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
Next Story





