போலீசாருக்கு கொலை மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரர் கைது

போலீசாருக்கு கொலை மிரட்டல்: பி.எஸ்.எஃப். வீரர் கைது
X
கழுகுமலை அருகே பணியில் இருந்த போலீசாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எல்லை பாதுகாப்புப் படை வீரா் கைது செய்யப்பட்டுள்ளார்.
கழுகுமலை அருகே பணியில் இருந்த போலீசாரை அவதூறாகப் பேசி கொலை மிரட்டல் விடுத்ததாக எல்லை பாதுகாப்புப் படை வீரா் கைது செய்யப்பட்டுள்ளார். இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது : தூத்துக்குடி மாவட்டம், கழுகுமலை அருகே முக்கூட்டு மழை ஸ்ரீ முத்து வீரப்பசாமி கோயில் திருவிழாவை முன்னிட்டு சனிக்கிழமை இரவு நடைபெற்ற கரகாட்ட நிகழ்ச்சிக்கு கழுகுமலை காவல் நிலைய போலீசார் மாரியம்மாள், சேதுராஜன் ஆகிய 2 பேரும் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அங்கு வந்த சிப்பிப்பாறை வடக்கு தெருவை சோ்ந்த சமுத்திரவேல் மகனான எல்லை பாதுகாப்பு படை காவலரான பாண்டியராஜ் (33), அவா்கள் இருவரையும் அவதூறாக பேசி மிரட்டி பணி செய்ய விடாமல் தடுத்தாராம். அப்பகுதி மக்கள் கண்டித்தவுடன் அவா் தப்பி ஓடி விட்டாராம். இதுகுறித்து, காவலா் மாரியம்மாள் அளித்த புகாரின் பேரில் கழுகுமலை போலீசார் வழக்குப் பதிந்து பாண்டியராஜை கைது செய்தனர்.
Next Story