வீட்டுமனை கேட்டு திருநங்கைகள் மனு

வீட்டுமனை கேட்டு திருநங்கைகள் மனு
X
மனு
கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் திருநங்கைகள் வீட்டுமனை கேட்டு கலெக்டர் அலுவலகல் மனு அளித்தனர்.திருநங்கைகளான நாங்கள் 45 பேர் வாடகை வீட்டில் வசித்து வருகிறோம். நாங்கள் பணிபுரிவதற்கேற்ப எவ்வித வேலையும் இல்லை. எங்களுக்கென வருமானம் இல்லாததால் அவ்வப்போது கிடைக்கும் வருமானத்தை வைத்து, வாழ்க்கை நடத்தி வருகிறோம். வாடகை வீட்டில் வசிப்பதால் எங்களுக்கு கூடுதல் செலவு ஏற்படுகிறது. எனவே, சிறுவங்கூர் மற்றும் பொற்படாக்குறிச்சி கிராம எல்லையில் உள்ள அரசுக்கு சொந்தமான இடத்தில் ஏதேனும் ஒரு இடத்தை தேர்வு செய்து, வீட்டு மனை வழங்க வேண்டும். இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
Next Story