கோவை: கே.என். நேருவின் சகோதரர் வீட்டில் அமலாக்கத்துறை சோதனை
கோவை மசக்காளிபாளையம் பகுதியில் உள்ள TVH கட்டுமான நிறுவனத்திலும், அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் மணிவண்ணன் வீட்டிலும் நேற்று அமலாக்கத்துறை அதிகாரிகள் சோதனை மேற்கொண்டனர். இந்த சம்பவம் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கோவை திருச்சி சாலை, அவிநாசி சாலை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் அடுக்குமாடி குடியிருப்புகளை கட்டி விற்பனை செய்து வரும் TVH நிறுவனத்தை மணிவண்ணன் கவனித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும், இந்த நிறுவனம் சென்னை, திருச்சி உள்ளிட்ட தமிழகத்தின் பல்வேறு நகரங்களிலும் கட்டுமானப் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது. அமைச்சர் கே.என். நேருவின் சகோதரர் மற்றும் முக்கிய கட்டுமான நிறுவனத்தின் உரிமையாளர் வீட்டில் ஒரே சமயத்தில் அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருவது பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளது. சோதனைக்கான காரணம் குறித்து அமலாக்கத்துறை இதுவரை அதிகாரப்பூர்வமாக எந்த தகவலையும் வெளியிடவில்லை. இந்த சோதனை தொடர்பாக மேலும் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்திலும் கவனத்தை ஈர்த்துள்ளது.
Next Story




