சிறுமியை கற்பமாக்கியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை

சிறுமியை கற்பமாக்கியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை
X
சிறுமியை கற்பமாக்கியவருக்கு வாழ்நாள் சிறை தண்டனை விதித்தது சிவகங்கை நீதிமன்றம்
சிவகங்கை மாவட்டம், பள்ளத்துர் அருகேயுள்ள கொத்தரி கிராமத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி (56), கொட்டகை அமைக்கும் தொழிலாளியான இவர் கடந்த 2022ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அருகிலுள்ள ஒரு கிராமத்திற்கு வேலைக்காகச் சென்ற போது, அங்கு 10ஆம் வகுப்பு படித்து வந்த 16 வயது சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்து, கர்ப்பம் ஏற்படுத்தியதாக கூறப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக காரைக்குடி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் அளித்த நிலையில், போலீசார் பழனிச்சாமியை கைது செய்தனர். பின்னர், அவர்மீது சிவகங்கை போக்ஸோ சிறப்பு நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது. வழக்கை விசாரித்த நீதிபதி கோகுல் முருகன், சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்ததற்காக ஒரு வாழ்நாள் சிறை மற்றும் ரூ.1000 அபராதம், சிறுமியை கர்ப்பம் ஆக்கியதற்காக மேலும் ஒரு வாழ்நாள் சிறை மற்றும் ரூ.1000 அபராதம் விதித்ததோடு, இந்த இரண்டு தண்டனைகளும் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டும் என உத்தரவிட்டார். மேலும், பாதிக்கப்பட்ட சிறுமிக்கு தமிழக அரசு சார்பாக ரூ.5 லட்சம் இழப்பீடு வழங்கவும் உத்தரவிட்டுள்ளார்
Next Story