கரூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ- மாணவியருக்கான பேச்சுப்போட்டி.

கரூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ- மாணவியருக்கான பேச்சுப்போட்டி.
கரூரில் தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் சார்பில் கல்லூரி மாணவ- மாணவியருக்கான பேச்சுப்போட்டி. கரூர் அரசு கலைக் கல்லூரி கூட்ட அரங்கில், தமிழ்நாடு மாநில சிறுபான்மையினர் ஆணையம் நடத்தும் கல்லூரி மாணவ மாணவிக்கான 2025 ஆம் ஆண்டுக்கான பேச்சு போட்டி அமைப்பின் மாநில ஒருங்கிணைப்பாளர் பேராசிரியர் கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கரூர் மாநகராட்சி மேயர் கவிதா பள்ளப்பட்டி நகர் மன்ற தலைவர் முனைவர் ஜான் கரூர் மாநகராட்சி மண்டல தலைவர்கள் கனகராஜ் மற்றும் கோல்டு ஸ்பாட் ராஜா, கரூர் மாவட்ட திமுக இளைஞரணி செயலாளர் சக்திவேல், உள்ளிட்ட நிர்வாகிகள் மற்றும் பேச்சுப் போட்டியில் பங்கேற்க வந்த 108 மாணவ மாணவியர்கள் கலந்து கொண்டனர். நிகழ்ச்சியில் சிறப்புரையாற்றியகான்ஸ்டன்டைன் ரவீந்திரன், ஒரு காலத்தில் கல்வியில் பின்தங்கிய மாவட்டமாக கரூர் மாவட்டம் இருந்தது. ஆனால், இன்று நடைபெறும் பல்வேறு தலைப்புகளில் நடைபெறும் பேச்சு போட்டியில் பங்கேற்க வந்த 108 மாணாக்கர்களில் 58 பேர் தமிழிலும், 50 பேர் ஆங்கிலத்திலும் இன்று பங்கேற்க இருக்கிறார்கள் என்பது பெருமைக்குரிய விஷயமாக கருதுவதாக தெரிவித்தார்.
Next Story