மகனுக்கு பெண் பார்க்க சென்றபோது லாரி மோதி விவசாயி பலி

X

போலீசார் விசாரணை
சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே உள்ள கோமாளியூர் பகுதியைச் சேர்ந்தவர் சித்தையன் (வயது 70). விவசாயி. இவர் தனது மகனுக்கு பெண் பார்க்க உறவினர் நல்லதம்பி (72) என்பவருடன் ஸ்கூட்டரில் தாரமங்கலத்திற்கு சென்றார். வேலகவுண்டனூர் பிரிவு சாலை அருகே சென்றபோது அந்த வழியாக வந்த லாரி ஸ்கூட்டர் மீது மோதியது. இதில் சித்தையன், நல்லதம்பி ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அக்கம் பக்கத்தினர் அவர்களை மீட்டு ஓமலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஆனால் வரும் வழியிலேயே சித்தையன் இறந்து விட்டது தெரியவந்தது. படுகாயம் அடைந்த நல்லதம்பிக்கு சிகிச்சை அளிக்கப்படுகிறது. இந்த விபத்து குறித்து ஓமலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story