சேலம் அருகே பூட்டிய வீட்டில் கொள்ளை முயற்சி மர்ம நபர்கள் யார்?

X

போலீஸ் விசாரணை
சேலம் அருகே வலசையூர் இளங்கோ நகரை சேர்ந்தவர் பிரபு (வயது 36). இவர், அப்பகுதியில் பள்ளி அருகே ஓட்டல் கடை வைத்துள்ளார். இவர் கடந்த 5-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்துடன் மைசூரில் உள்ள வைத்தீஸ்வரன் கோவிலுக்கு பிரபு குடும்பத்தினருடன் சென்றார். நேற்று காலை அவர்கள் சேலம் திரும்பினர். அப்போது வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, பீரோவில் வைக்கப்பட்டிருந்த பொருட்கள் ஆங்காங்கே சிதறி கிடந்தன. மேலும், வீட்டின் ஓட்டை பிரித்து கொள்ளை முயற்சி நடந்திருப்பது தெரியவந்தது. இதுகுறித்து வீராணம் போலீசில் பிரபு புகார் செய்தார். அதன்பேரில், போலீசார் விசாரணை நடத்தினர். அதில், வீட்டில் ஆட்கள் இல்லாததை மர்மநபர்கள் நோட்டமிட்டு ஓட்டை பிரித்து உள்ளே இறங்கியுள்ளனர். ஆனால் வீட்டிற்குள் பணம் எதுவும் இல்லாததால் அவர்கள் வந்த வழியாகவே வெளியே தப்பி சென்றிருப்பது விசாரணையில் தெரியவந்தது. இந்த கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட மர்ம நபர்கள் குறித்து வீராணம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Next Story