தமிழக கவர்னருக்கு எதிரான தீர்ப்பு- கரூரில் திமுகவினர் கொண்டாட்டம்.

தமிழக கவர்னருக்கு எதிரான தீர்ப்பு- கரூரில் திமுகவினர் கொண்டாட்டம்.
தமிழக கவர்னருக்கு எதிரான தீர்ப்பு- கரூரில் திமுகவினர் கொண்டாட்டம். தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றிய 10 தீர்மானங்களை ஆளுநர் ரவிக்கு ஒப்புதல் வழங்க அனுப்பி வைத்தனர். ஒப்புதல் வழங்காமல் நிறுத்தி வைத்து, அதனை குடியரசு தலைவருக்கு அனுப்பி வைத்தார். இதனால் மீண்டும் சட்டமன்றத்தில் அதே தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு கவர்னருக்கு அனுப்பப்பட்டது. அப்போதும் இந்த தீர்மானத்திற்கு ஒப்புதல் வழங்காததால்,உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு முறையீடு செய்தது. அந்த வழக்கில் இன்று உச்ச நீதிமன்றம் கவர்னருக்கு கண்டனத்தை தெரிவித்து தீர்மானங்கள் அனைத்தையும் நீதிமன்றத்தின் சிறப்பு அதிகாரத்தின் மூலம் நிறைவேற்றப்பட்டதாக தீர்ப்பு வழங்கியது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சட்டப் போராட்டத்திற்கு கிடைத்த வெற்றி என தமிழக முழுவதும் திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாடினர். இதே போல கரூர் பேருந்து நிலையம் ரவுண்டானா பகுதியில் திமுக மாவட்ட நிர்வாகிகள் தீர்ப்பை ஆதரித்து சற்று முன் கோஷங்கள் எழுப்பி, பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடினார்.
Next Story