ராமநாதபுரம் விவசாயிகள் மறியல் போராட்டம்

மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட முயற்சி
ராமநாதபுரம் மாவட்டம்மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு வைகை விவசாயிகள் சங்கத்தைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான விவசாயிகள் ரயில் மறியலில் ஈடுபட முயற்சி டெல்லியில் போராடிய விவசாயிகள் மீது வழக்கு பதிவு செய்ததை கண்டித்தும் ராமநாதபுரம் மாவட்டத்தில் பருவம் தவறி பெய்த மழையால் நெல் மற்றும் மிளகாய் விவசாயம் பாதிக்கப்பட்டுள்ளது. எனவே நெல்லுக்கு ஏக்கருக்கு 20,000 மிளகாய்க்கு ஏக்கருக்கு 25 ஆயிரம் ரூபாயும் இழப்பீடு வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலியுறுத்தி ராமநாதபுரம் மாவட்டம் கமுதி, முதுகுளத்தூர், திருவாடனை, ஆர்எஸ் மங்கலம், பரமக்குடி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளை சேர்ந்த நூற்றுக்கும் மேற்பட்ட விவசாயிகள் ரயில் மறியல் போராட்டத்தில் ஈடுபடுவதற்காக பேரணியாக சென்ற போது ராமநாதபுரம் அரசு பணிமனை முன்பு தடுத்து நிறுத்தினர்.இதனை தொடர்ந்து மூன்று அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடத்தினர். இதனை யடுத்து 63 பெண்கள் உட்பட 314 விவசாயிகள் கைது செய்யப்பட்டு தனியார் திருமண மஹாலில் தங்க வைக்கப்பட்டுள்ளனர் விவசாயிகளின் போராட்டத்தால் ராமேஸ்வரம்- மதுரை தேசிய நெடுஞ்சாலையில் சுமார் 20 நிமிடத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
Next Story