வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திமுக கூட்டணி அரசு எதிர்த்து வருகிறது, நீதிமன்றம் மூலம் அதற்கு தீர்வு காணப்பட்டு இஸ்லாமிய மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும்

X

செய்தியாளர் சந்திப்பு
தேனி நாடாளுமன்ற உறுப்பினர் தங்க தமிழ்ச்செல்வன் இன்று தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் மாவட்ட ஆட்சியர் ரஞ்சித் சிங்கை சந்தித்து கோடை காலத்தில் தேனி மாவட்டத்தில் தண்ணீர் தட்டுப்பாடு இல்லாமல் பொதுமக்களுக்கு தண்ணீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி கோரிக்கை வைத்தார் பின்னர் செய்தியாளர்களை சந்தித்த தங்க தமிழ்ச்செல்வன் கோடைகாலம் வர உள்ளதால் தண்ணீர் தட்டுப்பாடு ஏற்படுவதை தவிர்க்க மாவட்டத்தில் உள்ள 28 கூட்டுக் குடிநீர் திட்டத்தை முறையாக செயல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மாவட்ட ஆட்சியரை சந்தித்து கோரிக்கை வைத்தேன் அதற்கு உடனே நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார் மேலும் 18 ஆம் கால்வாய் திட்டத்தில் இருந்து போடி மக்களுக்கு குடிநீர் கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும், குரங்கணி உள்ளிட்ட மலைப் பகுதிகளில் இணையதள சேவை வேண்டுமென மக்களின் கோரிக்கையை மாவட்ட ஆட்சியரிடம் கூறினேன். அதற்கு நடவடிக்கை எடுப்பதாக தெரிவித்துள்ளார் தேனி மாவட்டத்திற்கு கேந்திரிய வித்யாலயா பள்ளிக்கு இடம் தேர்வு செய்யப்பட்டு விட்டது இந்த ஆண்டுக்குள் பள்ளி தொடங்கப்படும் ஒன்றிய அரசு கொண்டு வந்த வக்பு வாரிய சட்ட திருத்தத்தை திமுக கூட்டணி அரசு எதிர்த்து வருகிறது நீதிமன்றம் மூலம் அதற்கு தீர்வு காணப்பட்டு இஸ்லாமிய மக்களுக்கு நல்ல தீர்வு கிடைக்கும் அதிமுக நடப்பு செய்தால் செங்கோட்டையன் சட்டப்பேரவையில் அமர்ந்து பேசுகிறார் அதிமுகவில் ஒரு நிலைப்பாடு இல்லை என்று இதன் மூலம் வெட்ட வெளிச்சமாக தெரிகிறது ஒன்றிய அரசை தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் நியாயமாக எதிர்த்து வருவதால் பழிவாங்கும் நோக்கத்தோடு தமிழக அமைச்சர்கள் மீது அமலாக்கத்துறை சோதனை நடைபெற்று வருகிறது
Next Story