தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து தேனி ஆட்சியர் அலுவலகம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டம்

ஆர்ப்பாட்டம்
தமிழ்நாடு அரசு நியாய விலை கடை பணியாளர் சங்கம் சார்பில் 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி தேனி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், ரேஷன் துறையை தனித்துறையாக அறிவிக்க வேண்டும், ரேஷன்கடை ஊழியர்களுக்கு புதிய ஊதியம் நிர்ணயம் செய்ய வேண்டும். நியாய விலை கடை பணியாளர் பணியில் இருக்கும் போது உயிரிஇழந்தால் அவர்களது வாரிசுகளுக்கு வேலை வழங்கப்பட வேண்டும் கடைகளுக்கு சப்ளை செய்யும் ரேஷன் பொருட்களை, எடை குறையாமல் சப்ளை செய்ய வேண்டும். தேனி TCSS துணைப் பதிவாளர் பணியாளர்களை துன்புறுத்துவது விரோத போக்கை கையாள்வது என அதிகார ஆணவப்போக்குடன் செயல்படுகிறார் அதனால் அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுத்து இடமாற்றம் செய்ய வேண்டும் ஓய்வு பெற்ற ரேஷன் கடை பணியாளர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்பட வேண்டும் உள்ளிட்ட 30 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் நியாய விலைக் கடை பணியாளர் சங்கத்தினர் கருப்பு சட்டை அணிந்து வந்து கண்டன கோஷங்களை எழுப்பி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்
Next Story