ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஏற்பாடு இல்லை

ஆட்சியர் அலுவலகத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு உரிய ஏற்பாடு இல்லை
X
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்தில் அவலம் - தரையில் தவழும் மாற்றுத்திறனாளிகள்
சிவகங்கை ஆட்சியர் அலுவலகத்திற்கு மாவட்டம் முழுவதும் இருந்து பல்வேறு மாற்றுத்திறனாளிகள் மனு கொடுக்க வந்து செல்கின்றனர். தவழும் மாற்று திறனாளிகள் வருவதற்கு அவர்களுக்கான வீல் சேர் இல்லாததால் ஆட்டோவில் இருந்து இறங்கி, அலுவலகத்திற்குள் வருவதற்கு நீண்ட தூரம் தரையில் தவழ்ந்து வர வேண்டிய சூழல் உள்ளது. இச்சம்பவம் அங்கு இருப்பவர்கள் மத்தியில் அதிர்ச்சியையும், வேதனையையும் ஏற்படுத்தி வருகிறது. மாற்றுத்திறனாளிகள் தரையில் தவழ்ந்து வருவதை பார்த்தும் மாற்றுத்திறனாளி நல அலுவலர்கள் எந்த விதமான உதவியும் செய்ய முன்வராதது மிகுந்த வேதனைக்குரியதாக சமூக ஆர்வலர்கள் குற்றம் சாட்டுகின்றனர். மேலும் மாவட்ட ஆட்சியர் இதில் தனி கவனம் செலுத்தி மாற்று திறனாளிகளுக்கு உரிய ஏற்பாடுகளை செய்து தர வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர்
Next Story