பூக்குழி இறங்கிய பக்தர்கள்.

மதுரை அவனியாபுரத்தில் பங்குனி உற்சவ திருவிழாவில் பக்தர்கள் பூக்குழி இறங்கி நேர்த்திக்கடனை செலுத்தினார்கள்.
மதுரை அவனியாபுரம் மகாகாளியம்மன் கோவில் பங்குனி பொங்கல் விழா நடைபெற்றது. 600 ஆண்டுகள் பழமை வாய்ந்த மகா காளியம்மன் கோவிலில் பங்குனி பொங்கல் விழா நிகழ்ச்சிக்கு தலைவர் பாலச்சந்திரன் செயலாளர் முத்து மணி பொருளாளர் கணேசன் மற்றும் நிர்வாகிகள் வேல்முருகன் முத்துராமலிங்கம் ஹரி கிருஷ்ணன் ஆகியோர் செய்திருந்தனர். கடந்த 31ம் தேதி கொடியேற்றத்துடன் பங்குனி பொங்கல் விழா துவங்கியது இந்நிலையில் நேற்று பால்குடம் எடுக்கும் நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் பால்குடம் எடுத்து வந்தனர். அதனைத் தொடர்ந்து இன்று (ஏப்.8) பூக்குழி இறங்கும் விழாவில் ஏறாளமான பக்தர்கள் அலகு குத்தி பூக்குழி இறங்கினர். பெண்கள் வேண்டு தளுக்காக குழந்தைகளுடன் பூக்குழி இறங்கினர். மேலும் பறவைக்காவடி தேர் காவடி எடுத்து வந்துபக்தர்கள் மகாகாளியம்மன் கோவிலில் நேர்த்திக்கடன் செலுத்தினர். மகா காளியம்மன் கோவில் திருமண மண்டபத்தில் ஐயாயிரம் பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.
Next Story