ராமநாதபுரம் விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது
ராமநாதபுரம் மாவட்டம்அரசு பணிமனை புதிய பேருந்து நிலையம் பகுதியில் ராமநாதபுரம் மாவட்ட விடுதலை சிறுத்தை கட்சியின் சார்பில் வப்பு வாரிய திருத்தச் சட்டத்தை இந்திய ஒன்றிய பாஜக அரசு திரும்ப பெற வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது ஆர்ப்பாட்டத்திற்கு கட்சியின் கிழக்கு மாவட்ட செயலாளர் அற்புத குமார் மேற்கு மாவட்ட செயலாளர் பிரபாகரன் ஆகியோர்கள் தலைமை வகித்தனர் ராமநாதபுரம் விருதுநகர் மண்டல துணைச் செயலாளர் விடுதலை சேகரன் வரவேற்புரை ஆற்றினார் மதுரை சிவகங்கை மண்டல செயலாளர் மாலின் வக்பு வாரிய சட்டத்திற்கு எதிராக செயல்படும் ஒன்றிய பாஜக அரசை கண்டித்து கண்டன உரையாற்றினார் கூட்டத்தின் நிறைவாக பாஜக ஒன்றிய அரசுக்கு எதிராக கண்டன கோஷங்கள் முழங்கினர் ஆர்ப்பாட்டத்தில் மனிதநேய மக்கள் கட்சியின் சார்பில் அயூப்கான், மருத்துவ அணி மாவட்ட செயலாளர் தமீம், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சியின் மாவட்ட தலைவர் வரிசை முகமது ஜமாத் உலமா சபை வட்டாரத் தலைவர் முகமது ரபீக் உலவி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்
Next Story



