ஹோட்டல் கழிவு நீர் தொட்டியில் விழுந்த குழந்தை : தூத்துக்குடியில் பரபரப்பு!

தூத்துக்குடியில் ஹோட்டலில் திறந்த நிலையில் இருந்த செப்டிக் டேங்க் தொட்டியில் விழுந்த குழந்தை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள நிலையில், மாநகராட்சி அதிகாரிகள் ஹோட்டலுக்கு சீல் வைத்தனர்.
தென்காசி மாவட்டம் இசக்கி மகன் கண்ணன் (35) - ஜெனிஷா தம்பதி கண்ணன் குடும்பத்தினருடன் தூத்துக்குடி மாவட்டம், மணப்பாடு கோவிலுக்கு சென்று விட்டு முத்தையாபுரத்தில் உள்ள தனது உடன் பிறந்த அக்கா பவித்ரா என்பவரின் வீட்டிற்கு வந்துள்ளார். அதன் பின்பு முத்தையாபுரம் திருச்செந்தூர் மெயின் ரோட்டில் உள்ள முருகப்பா செட்டிநாடு மெஸ்சிற்கு சாப்பிடுவதற்க்காக குடும்பமாக சென்றுள்ளார்.  அப்போது அவர்களது ரெபின் (3) என்ற குழந்தை ஹோட்டலில் உள்ள பாத்ரூமிற்க்கு அவரது தாய் ஜெனிஷா அழைத்து சென்றுள்ளார். பின்னர் பாத்ரூமில் இருந்து வெளியே வந்த குழந்தை தனது அப்பாவிடம் சென்று விட்டதாக என்னி மேற்படி நபர் பாத்ரூம் சென்று விட்டார். அதன் பின்பு வெளியே வந்த ஜேனிஷா அப்பாவிடம் சென்று பிள்ளையை கேட்கும் போது பிள்ளை இங்கே வரவில்லை என கூறியுள்ளார்.  அதன் பின்பு குழந்தையை தேடும் போது குழந்தை ஹோட்டல் பாத்ரூம் அருகில் பராமரிப்பு இல்லாமல் திறந்த நிலையில் வைக்கப்பட்டிருந்த செப்டிக் டேங்கிற்குள் விழுந்துள்ளது. உடனே அருகில் இருந்த அவர்களின் உதவியுடன் அந்த குழந்தையை மீட்டு தூத்துக்குடி ஏவிஎம் தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்துள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த மாநகராட்சி தெற்கு மண்டல அதிகாரிகள் சம்பவ இடத்திற்கு சென்று விசாரணை நடத்தி ஹோட்டலுக்கு சீல் வைத்தனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
Next Story