சின்னமனூர் அருகே இருசக்கர வாகனம் மீது கார் மோதியதில் ஒருவர் படுகாயம்

X
கடமலைக்குண்டு பகுதியை சேர்ந்தவர் செல்வம் (53). இவர் நேற்று முன்தினம் தனது நண்பருடன் இருசக்கர வாகனத்தில் சின்னமனூர் அருகே சென்றுள்ளார். அப்பொழுது ஸ்ரீகுமார் என்பவர் ஓட்டி வந்த பொலிரோ கார் இவர்களது பைக் மீது மோதியது. இதில் செல்வம் படுகாயம் அடைந்த நிலையில் சிகிச்சைக்காக தேனி மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். விபத்து குறித்து சின்னமனூர் போலீசார் நேற்று (ஏப்.7) வழக்கு பதிவு.
Next Story

