விவேகானந்தா கல்லூரியில் “தடையை தாண்டுவோம்” கருத்தரங்கு

X
கன்னியாகுமரி அருகே அகஸ்தீஸ்வரம் விவேகானந்தா கல்லூரி வணிகவியல் துறை சார்பில் “தடையை தாண்டுவோம்” என்ற தலைப்பில் கருத்தரங்கு நடைபெற்றது. கல்லூரி முதல்வர் டாக்டர் டி. எஸ். ஜெயந்தி தலைமை வகித்தார். துறை தலைவர் டாக்டர் ஆர். தர்ம ரஜினி வரவேற்றார். அண்ணா மேலாண்மை பயிற்சி மைய பேராசிரியர் ஆர். ராமச்சந்திரன் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு மாணவர்களுக்கு பயனுள்ள கருத்துரையும் பயிற்சியும் வழங்கினார். முடிவில் ஸ்ரீ பிந்து நன்றி கூறினார். மாணவ, மாணவிகள் மற்றும் பேராசிரியர்கள் பலர் கலந்து கொண்டனர்.
Next Story

