ஆளுநருக்கு எதிராக தீர்ப்பு திமுகவினர் பட்டாசு வெடித்து கொண்டாட்டம்!
தூத்துக்குடி:தமிழக ஆளுநர் ஆர்.என். ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் தீர்ப்பு வழங்கியதை வரவேற்க்கும் விதமாக தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் பட்டாசு வெடித்து இனிப்பு வழங்கி உற்சாக கொண்டாட்டம். தமிழக சட்டமன்றத்தில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் கொண்டவரப்பட்ட தீர்மானங்களை கிடப்பில் போட்ட தமிழக ஆளுநர் ரவியின் மீது தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்ததை அடுத்து ஆளுநர் ரவிக்கு எதிராக உச்ச நீதிமன்றம் வழங்கியுள்ளது. குடியரசுத் தலைவரின் பரிசீலனைக்காக 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்திவைத்த தமிழக ஆளுநரின் செயல் சட்ட விரோதமானது என உச்ச நீதிமன்றம் இன்று தீர்ப்பளித்துள்ளது. இத்தீர்ப்பை வரவேற்கும் விதமாக தூத்துக்குடி எட்டையாபுரம் சாலையில் உள்ள கலைஞர் அரங்கம் முன்பு தூத்துக்குடி வடக்கு மாவட்ட திமுக சார்பில் திமுக தூத்துக்குடி மாநகரச் செயலாளர் ஆனந்த சேகரன் தலைமையில் திமுகவினர் பட்டாசு வெடித்தும், பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கி உற்சாக கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிகழ்ச்சியில், முன்னாள் மேயர் கஸ்தூரி தங்கம், மாவட்ட அமைத்தலைவர் செல்வராஜ், திமுக இளைஞரணி அமைப்பாளர் சி எம் மதியழகன், தொழிலாளர் அணி மாநகர அமைப்பாளர் முருக இசக்கி, துணை மேயர் ஜெனிடா, பெருமாள் கோவில் அறங்காவலர் குழு தலைவர் ஏசி செந்தில்குமார், திமுக மாவட்ட பிரதிநிதிகள் தெர்மல் சக்திவேல், சேர்மபாண்டியன், மாநகராட்சி மண்டல தலைவர்கள் கலைச்செல்வி திலகராஜ், வழக்கறிஞர் பாலகுருசாமி, மாநகராட்சி பணிக்குழு தலைவர் கீதா முருகேசன், மாநகர இளைஞரணி அமைப்பாளர் அருண் சுந்தர், பகுதி அமைப்பாளர் சூர்யா, மாநகர துணை அமைப்பாளர் ரவி, திமுக பகுதி செயலாளர் ரவிக்குமார், ஜெயக்குமார், ராமகிருஷ்ணன், நகரத் துணைச் செயலாளர் பிரமிளா, திமுக வட்டச் செயலாளர்கள் கதிரேசன், வழக்கறிஞர் சதீஷ்குமார், கங்கா ராஜேஷ், மாவட்ட துணை ஒருங்கிணைப்பாளர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அந்தோணி கண்ணன், அண்ணாத்துரை, பிரபு, அருணா தேவி, கலை அரசன், மகளிர் அணி அமைப்பாளர் கவிதா தேவி, சத்யா, வழக்கறிஞர் கிறிஸ்டோபர், வர்த்தக அணி அன்புராஜ், மாமன்ற உறுப்பினர்கள் மார்சீலின் அந்தோணி, இசக்கி ராஜா, ஜான் சீனிவாசன், கந்தசாமி, தெய்வந்திரன், ஜெயசீலி, நாகேஸ்வரி, ராமு அம்மாள், மற்றும் திமுக நிர்வாகிகள் மாமன்ற உறுப்பினர்கள் உள்ளிட்ட கலந்து கொண்டனர்.
Next Story




