தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கே.கணேசன் பேட்டி!

தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கே.கணேசன் பேட்டி!
X
தமிழகத்திலேயே தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு துறை விரைவில் 300 பணியாளர்கள் கொண்ட மிகப் பெரிய தீயணைப்பு துறையாக உருவாகும் என தூத்துக்குடி மாவட்ட தீயணைப்பு அலுவலர் கே.கணேசன் கூறியுள்ளார்.
தூத்துக்குடியில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தவர் அதிகமான தொழிற்சாலைகள் கொண்ட தூத்துக்குடி மாவட்டத்தில் 12000 லிட்டர் கொள்ளளவு கொண்ட பவுன்சர் ஊர்தி விரைவில் தூத்துக்குடி மாவட்டத்திற்கு வரவுள்ளது. திருச்செந்தூர் அருகே உடன்குடியில் 1300 மெகாவாட் மின் உற்பத்தி நிலையம் தொடங்கப்பட இருப்பதால் அங்கு இரண்டு தீயணைப்பு நிலையங்கள் 53 பணியாளர்களுடன் விரைவில் வர உள்ளன. அதன் பின்னர் 300 பணியாளர்கள் கொண்ட மாவட்டமாக இந்த மாவட்டம் உருவாகும் மேலும் தூத்துக்குடி மாவட்டத்தில் எட்டையாபுரம் கயத்தாறு ஆகிய பகுதிகளில் புதிய தீயணைப்பு நிலையம் அமைப்பதற்காக அரசுக்கு பரிந்துரை செய்யப்பட்டுள்ளது. தூத்துக்குடி மாவட்டம் ஓட்டப்பிடாரத்தில் 2 கோடியே 47 லட்ச ரூபாய் மதிப்பில் புதிய தீயணைப்பு நிலையம் கட்டப்படவுள்ளது என்று அவர் கூறினார். பேட்டியின் போது தீயணைப்பு உதவியாளர் நட்டார் ஆனந்தி உடன் இருந்தார்.
Next Story