கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.

கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது.
கொலை வழக்கில் கைதான இருவர் மீது குண்டாஸ் சட்டம் பாய்ந்தது. கரூர் மாவட்டம், பசுபதிபாளையம் , தொழிற்பேட்டை அருகே நரிக்கட்டியூர் சர்ச் அருகில் கடந்த 15.03.25ம் தேதி நரிகட்டியூரை சேர்ந்த இளையராஜா மகன் சந்தோஷ்குமார் வயது 26 என்பவரை தனது நண்பர்களுடன் மது அருந்தும் போது ஏற்பட்ட பிரச்சனையில் கொலை செய்யப்பட்டது தொடர்பாக பசுபதிபாளையம் காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கில் தொடர்புடைய நரிகட்டியூரைச் சேர்ந்த சுப்பிரமணி மகன் பிரகாஷ்,33 மற்றும் மேலப்பாளையம் நத்தமேடு பகுதியை சேர்ந்த முப்புலி மகன் சந்தோஷ் வயது 26 ஆகியோர் கைது செய்யப்பட்டு திருச்சி மத்திய சிறையில் இருந்து வருகிறார்கள். இந்த வழக்கில் ஏற்கனவே பிரகாஷ் என்பவர் மீது பசுபதிபாளையம் மற்றும் வெங்கமேடு காவல் நிலையங்களிலும், சந்தோஷ் என்பவர் மீது பசுபதிபாளையம் மற்றும் தாந்தோணிமலை காவல் நிலையங்களிலும் வழக்குகள் பதிவு செய்யப்பட்டு விசாரணையில் இருந்து வருகிறது. இந்நிலையில் இன்று குற்றம் சாட்டப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள பிரகாஷ் மற்றும் சந்தோஷ் ஆகியோர் மீது கரூர் மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பெரோஸ்கான் அப்துல்லா பரிந்துரையின் பேரில், கரூர் மாவட்ட ஆட்சியர் தங்கவேல் உத்தரவின் படி குண்டர் தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் இருவரையும் கைது செய்து திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.
Next Story