கரூரில்,வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வி சி க கண்டன ஆர்ப்பாட்டம்.

கரூரில்,வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வி சி க கண்டன ஆர்ப்பாட்டம்.
கரூரில்,வக்பு வாரிய திருத்த சட்டத்தை திரும்ப பெற வி சி க கண்டன ஆர்ப்பாட்டம். கரூர் தலைமை தபால் நிலையம் முன்பு, கரூர் மாவட்ட ஒருங்கிணைந்த விடுதலை சிறுத்தைகள் கட்சியின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்தில் கரூர் மாநகர மாவட்ட செயலாளர் கராத்தே இளங்கோவன், மேற்கு மாவட்ட செயலாளர் புகழேந்தி, கிழக்கு மாவட்ட செயலாளர் குறிச்சி சக்திவேல் என்கிற ஆற்றல் அரசு, கரூர் மேலிட பொறுப்பாளர் தங்கதுரை உள்ளிட்ட மாவட்ட அளவிலான கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர் இந்த ஆர்ப்பாட்டத்தில் வக்பு வாரிய சட்டத்தை நிறைவேற்றியதை திரும்ப பெற வலியுறுத்தியும், மத்திய பாஜக அரசை கண்டித்தும் கட்டண கோஷங்களை எழுப்பினர்.
Next Story